கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (16.02.2019) முல்லைத்தீவுக்கு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

இன்று காலை 11.00மணியளவில் உலங்குவானூர்தியில் முல்லைத்தீவினை வந்தடைந்த கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி றூ.கேதீஸ்வரன் அவர்கள் வரவேற்றார்.

இதனை தொடர்ந்து மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி திட்டங்களை ஆராயும் கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டதுடன் தெரிவுசெய்யப்பட்ட திட்ட பயனாளிகளுக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தார்.

இக் கூட்டத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

IMG 20190217 WA0026IMG 20190217 WA0022IMG 20190217 WA0018

இலங்கையின் 71 ஆவது சுதந்திரதினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று (04.02.2019) மேலதிக மாவட்ட செயலாளர் திரு.கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலாளர் திருமதி.றூ.கேதீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இதில் விருந்தினர்கள் பாண்ட் வாத்திய மற்றும் இன்னியம் கலைஞர்களின் அணிவகுப்புடன் மேடைக்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசியகீதம் இசைக்கப்பட்டது. அத்துடன் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன.

அதனை தொடர்ந்து சுதந்திரதினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வும், இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது.

indind2ind3

பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்களை போதைப்பொருள் தடுப்பின் முனைப்பான பங்குதாரர்களாக்கிக்கொண்டு தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் நடைமுறைப்படுத்தப்படும் அங்குரார்ப்பண வைபவம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றலுடன் 2019 ஜனவரி 21ம் திகதி முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் போதைப்பொருளினை எதிர்ப்போம் என சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டதுடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான நிதிப்பத்திரங்களும், முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் படையினர் வசமிருந்த காணிகளின் ஒருபகுதியினை விடுவிக்கும் பத்திரங்களும் வழங்கப்பட்டன.

51190444 366463460576103 1468406162671009792 n50340725 366463497242766 1876798990641528832 n50437968 366463547242761 4101617536305463296 n

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் தலைவருமாகிய கௌரவ சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் இன்று (09.01.2019) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்திருந்தார்.

அவரை முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களும், உத்தியோகத்தர்களும் வரவேற்றனர். தொடர்ந்து புதிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்ட அவர் வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிப்பொருட்களையும், பிரதேச செயலகங்களுக்கு தண்ணீர் பௌசர்களையும் வழங்கிவைத்தார்.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்கள தலைவர்கள், மற்றும் திட்டப் பயனாளிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

DSC09819DSC09831DSC09839

கௌரவ சபாநாயகர் கரு ஜெயசூரிய, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் கௌரவ அமைச்சர் தயா கமகே, கௌரவ இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.சுமந்திரன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று (03.01.2019) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

DSC 0015DSC 0019DSC 0040

இன்றைய (01.01.2019) வருட ஆரம்ப நாள் நிகழ்வுகள் எமது மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய நிகழ்வில் உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டதுடன் ஒருவருக்கொருவர் புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

2019 12019 22019 3

ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் 27.12.2018 - இன்று மாவட்ட செயலகத்தில் ஒளிவிழா நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Oli1Oli2Oli3


இன்று 26-12-2018 அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இன்றய தினம் தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது..

 241242243

”மாற்றுத்திறனாளிகளை வலுவூட்டுதல், உள்வாங்குதல் மற்றும் சமத்துவத்தினை உறுதிப்படுத்துதல்” எனும் தொனிப்போருளில் கடந்த 21.12.2018 அன்று மாவட்ட செயலகத்தில் ”மாற்றுத்திறனாளிகளிற்கான சர்வதேச தினம்” கொண்டாடப்பட்டது.

101102

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன் மாவட்ட செயலகமும் மாவட்ட கலாசார அதிகாரசபையும் இணைந்து நடாத்திய மாவட்ட இலக்கிய விழா இன்று (20..12.2018) மல்லாவி மத்திய கல்லூரி - பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களும் மாண்புறு விருந்தினராக திரு.நா.சிவராசா (புலவர் வள்ளுவதாசன்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட செயலக அதிகாரிகளும், பிரதேச செயலாளர்கள், வலயக்கல்விப்பணிப்பாளர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந் நிகழ்வில் முல்லை இலக்கியச்சுடர் 2018 க்கான விருதுகளும் வழங்கப்பட்டது.

123

முல்லைத்தீவு - அரச அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று (19.12.2018) கரைதுறைபற்று பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது. இன்றய இறுதிநாள் நிகழ்வில் மாவட்ட செயலக அணியினருக்கும் தபால் திணைக்கள அணியினருக்கும் இடையில் உதைபந்தாட்ட போட்டியும், ஆண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பெண்கள் அணியினருக்கும் மாவட்ட செயலக பெண்கள் அணியினருக்குமான கயிறுழுத்தல் போட்டியும் இடம்பெற்றது.உதைபந்தாட்ட போட்டியில் தபால்திணைக்களத்தினரும் கயிறுழுத்தல் போட்டியில் மாவட்ட செயலக அணியினரும் வெற்றியினை பெற்றுக்கொண்டனர்.

முல்லைத்தீவிலுள்ள 19திணைக்களங்கள் பங்குபற்றிய இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மற்றும் ஏனைய திணைக்களங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டிய அணியினருக்கான சான்றிதழ்களும் வெற்றிக்கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2018 ம் ஆண்டுக்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டியில் அதிகூடிய வெற்றிக்கிண்ணங்களை பெற்று மாவட்ட செயலக அணியினர் முன்னணியில் திகழ்கின்றனர்

48429665 2194125297311052 715372815133442048 n.48382589 2194125623977686 9190539872325074944 n48389350 2194125320644383 5919487685860261888 n

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரனையுடன் ACTED மற்றும் வறுமை ஆராய்ச்சி நிலையத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முல்லைத்தீவு, துணுக்காய் கல்வி வலயங்களில் இரண்டாம் நிலைக் கல்வி வழங்கல் மற்றும் உள்ளுராட்சி சபைகளினது சேவை வழங்கல் தொடர்பான குடிமக்கள் அறிக்கை அட்டையின் இரண்டாம்கட்ட ஆய்வுகளை கண்டறியும் நிகழ்வு 11.12.2018 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்

48367358 2182635231793392 1874426764239831040 n48183823 2182635571793358 825467962394673152 n48367358 2182635231793392 1874426764239831040 n

இன்று (11.12.2018) மாவட்ட மற்றும் மாகாண ரீதியில் விளையாட்டுத்துறையில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் முகமாக மாவட்ட செயலகத்தில் ”வர்ணஇரவு” நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.

dsc 0451dsc 0515dsc 0549

கடந்த வாரம் ஏற்பட்ட பெருமழையினை தொடர்ந்து உடைப்பெடுத்த முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நித்தகை குளத்தின் புனர்நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் 13.11.2018 இன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், உத்தியோகத்தர்களும் நிர்மானப்பணிகளுக்கு தமது பங்களிப்பினையும் வழங்கியிருந்தனர்.

மேற்படி நிர்மானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. இப் பணிகளில் நீர்பாசனத்திணைக்களம், கமநலசேவைகள் திணைக்களம், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் ஈடுபட்டுவருகின்றனர்

DSC09462DSC09559